இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான பி லௌவ் கண்டி அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான தம்புலா ஆரா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று கொழும்புவிலுள்ள பிரமதசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தம்புலா அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் காயம் காரணமாக கண்டி அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி எல்பிஎல் கோப்பையை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பி-லௌவ் கண்டி : முகமது ஹாரிஸ், தினேஷ் சண்டிமால், அஷேன் பண்டார, ஏஞ்சலோ மேத்யூஸ்(கே), கமிந்து மெண்டிஸ், சதுரங்க டி சில்வா, ஆசிஃப் அலி, லஹிரு மதுஷங்க, முகமது ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப்.
தம்புலா அரா : அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரமா, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், ஹைடன் கெர், துஷான் ஹேமந்த, பினுர ஃபெர்னாண்டோ, நூர் அகமது, பிரமோத் மதுஷன்.