இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பி லௌவ் கண்டி அணியின் கேப்டன் வநிந்து ஹசரங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கலே டைட்டன்ஸ்: லசித் குரூஸ்புலே, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், சோஹன் டி லிவேரா, நஜிபுல்லா ஸத்ரன், தசுன் ஷனகா(கே), சீக்குகே பிரசன்னா, கசுன் ராஜித, லஹிரு குமார, தப்ரைஸ் ஷம்சி, சோனல் தினுஷா
பி-லௌவ் கண்டி: முகமது ஹாரிஸ், தனுக டபரே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், சதுரங்க டி சில்வா, ஆசிஃப் அலி, வநிந்து ஹசரங்க(கே), சஹான் ஆராச்சிகே, லஹிரு மதுஷங்க, முகமது ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான்.