ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் : முஹமது வசீம்(கே), ஆர்யன்ஷ் ஷர்மா, விரித்யா அரவிந்த், ஆசிஃப் கான், அன்ஷ் டாண்டன், பாசில் ஹமீத், அலி நசீர், ஆயன் அப்சல் கான், முகமது ஃபராசுதீன், முஹம்மது ஜவதுல்லா, ஜாகூர் கான்
நியூசிலாந்து: சாத் போவ்ஸ், டிம் செய்ஃபெர்ட், டேன் க்ளீவர், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், கோல் மெக்கன்சி, ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், டிம் சௌதீ(கே), பென் லிஸ்டர்.