LPL 2024: மதீஷா பதிரானா அசத்தல் பந்துவீச்சு; மார்வெல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஸ்டிரைக்கர்ஸ்!
இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்றுந் நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கலே மார்வெல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மார்வெல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன்…
இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்றுந் நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கலே மார்வெல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கலே மார்வெல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மார்வெல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 10 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.