MLC 2024: சதமடித்து அசத்திய ரிக்கெல்டன்; நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஓர்காஸ்!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 5 ரன்களுக்கும், உன்முக்த் சந்த் 18 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து…
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் 5 ரன்களுக்கும், உன்முக்த் சந்த் 18 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த ஜேசன் ராய் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.