ஐபிஎல் 2022: தோனியை மீம் காணொளி மூலம் பாராட்டிய வாசிம் ஜாஃபர்!

MS Dhoni quits as CSK captain. Wasim Jaffer reacts with Baahubali-related post
2022 ஐபிஎல் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது. ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி இன்று விலகியுள்ளார்.
புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அணியை வழிநடத்தவுள்ளார். எனினும், ஒரு வீரராகவே அவர் அணியில் நீடிக்கவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
MS Dhoni leaving CSK captaincy and continuing as a player: #IPL2022 pic.twitter.com/auPPAtvxM3
— Wasim Jaffer (@WasimJaffer14) March 24, 2022
தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை, முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் பாகுபலி திரைப்படத்தில் அரசவையிலிருந்து வெளியேறும் பாகுபலி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு அதன் காணொளியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த காணொளி அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News