WPL 2023: மும்பை இந்தியன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த ரோஹித் சர்மா!

Mumbai Indians men's team captain Rohit Sharma wishes to Mumbai Indians women's team all the best for the WPL final!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு, ஆண்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 4 வாரங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தை நான் பார்த்து வருகிறேன். இது இறுதிப் போட்டி. ஆகையால், நல்லா ஜாலியாக இருங்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News