
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ், சல்மான் அகா(கே), உமைர் யூசுப், உஸ்மான் கான், ஷதாப் கான், அப்துல் சமத், ஜஹந்தத் கான், ஹாரிஸ் ரவுஃப், சுஃபியான் முகீம், முகமது அலி
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல் (கே), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ், வில்லியம் ஓர்ர்கே.