இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 08) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டி தொடங்கு முன் மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் மழை நின்ற பின் இப்போட்டியானது 37 ஓவர்களாக குறைப்பட்டு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியின் டாம் லேதம் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இத்தொடரில் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கை அணி பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), ஜனித் லியானகே, சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, ஈஷான் மலிங்க, அசித்த ஃபெர்னாண்டோ
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர்(கே), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓரூர்க்.