இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இலங்கை அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் தொடரையும் சமன்செய்யும் முனையில் விளையாடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, பினுர ஃபெர்னாண்டோ, மதீஷ பதிரனா, நுவான் துஷார
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மிட்செல் ஹே, மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கே), ஜகாரி ஃபௌல்க்ஸ், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.