![ODI Tri Series: South Africa have won the toss and have opted to bat! முத்தரப்பு ஒருநாள் தொடர்: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது தென் ஆப்பிரிக்கா!](https://img.cricketnmore.com/uploads/2025/02/ODI-Tri-Series-South-Africa-have-won-the-toss-and-have-opted-to-bat!-lg.jpg)
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது இன்று (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகீல் மற்றும் முகமது ஹொஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி, ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ் ஆகியொர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெம்பா பவுமா(கே), டோனி டி ஸோர்ஸி, கைல் வெர்ரேய்ன், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், கேசவ் மகராஜ், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஃபகார் ஸமான், பாபர் ஆசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான்(கே), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, அப்ரார் அகமது.