பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளைப் பெற்று சமனிலையுடன் உள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
இங்கிலாந்து: பிலிப் சால்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி(கே), சாம் கர்ரன், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ரீஸ் டாப்லி
பாகிஸ்தான் : பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன்.