பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மீண்டும் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து : டாம் லாதம்(கே), சாட் போவ்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கன்சி, ஹென்றி ஷிப்லி, மாட் ஹென்றி, பென் லிஸ்டர்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம்(கே), ஃபகார் ஸமான், சைம் அயூப், ஷதாப் கான், இப்திகார் அகமது, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஸமான் கான்.