வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. காலையில் தொடங்க இருந்த இப்போட்டியானது போதிய வெளிச்சமின்மை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது.
இதனால் இப்போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையானது எடுக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் முகமது ஹுரைரா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸின் அமிர் ஜோங்கோவிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), மைக்கேல் லூயிஸ், கேசி கார்டி, கவேம் ஹாட்ஜ், அலிக் அதனாஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், டெவின் இம்லாச், குடகேஷ் மோட்டி, கெவின் சின்க்ளேர், ஜோமல் வாரிக்கன், ஜெய்டன் சீல்ஸ்.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத்(கேப்டன்), முகமது ஹுரைரா, பாபர் ஆசாம், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, ஸஜித் கான், நோமன் அலி, குர்ராம் ஷாசாத், அப்ரார் அகமது.