பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து பெஷாவர் ஸால்மி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
பெஷாவர் ஸால்மி: பாபர் அசாம்(கே), சைம் அயூப், முகமது ஹாரிஸ், ஹசிபுல்லா கான், டாம் கோஹ்லர்-காட்மோர், ஜேம்ஸ் நீஷம், அமீர் ஜமால், அஸ்மதுல்லா ஒமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், வஹாப் ரியாஸ், சல்மான் இர்ஷாத்
இஸ்லாமாபாத் யுனைடெட்: அலெக்ஸ் ஹேல்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், சொஹைப் மக்சூத், காலின் முன்ரோ, ஷதாப் கான்(கே), அசம் கான், ஃபஹீம் அஷ்ரஃப், முபாசிர் கான், ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.