இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று மும்பையில் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இன்றைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உடற்குதி காரணாமாக விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.
இந்தியா: ஷுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.