பாகிஸ்தானின் உள்ளுர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பந்துவீச தீர்மானிதது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு மேத்யூ வேட் - ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 36 ரன்களில் வேட் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதர் அலி 18, சோயிப் மாலிக் 10 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் இமாத் வாசிம் 19 பந்துகளில் 35 ரன்களையும், பென் கட்டிங் 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது.