பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச்சென்றது. இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முல்தான் சுல்தான்ஸ் இப்போட்டியில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
முல்தான் சுல்தான்ஸ் – டேவிட் மில்லர், ஷான் மசூத், குஷ்தில் ஷா, உஸ்மான் கான், அராபத் மின்ஹாஸ், கீரன் பொல்லார்ட், முகமது ரிஸ்வான்(c), உசாமா மிர், ஜோஷுவா லிட்டில், அகீல் ஹொசைன், ஷாநவாஸ் தஹானி
லாகூர் கலாந்தர்ஸ் - ஃபகார் ஸமான், ஹுசைன் தலாத், கம்ரான் குலாம், அப்துல்லா ஷஃபீக், லியாம் டௌச, சிக்கந்தர் ராஸா, ஷேன் டாட்ஸ்வெல், சாம் பில்லிங்ஸ், ஷஹீன் அப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், ஜமான் கான்.