பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடவுள்ளது.
பெஷாவர் ஸால்மி : சைம் அயூப், பாபர் ஆசம்(கே), ரோவ்மன் பவல், டாம் கோலர்-காட்மோர், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ், அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், அர்ஷத் இக்பால்
முல்தான் சுல்தான்ஸ்: ஷான் மசூத், முகமது ரிஸ்வான்(கே), ரைலீ ரூஸோவ், டிம் டேவிட், குஷ்தில் ஷா, கீரன் பொல்லார்ட், அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அப்ரிடி, ஷெல்டன் காட்ரெல், இஹ்சானுல்லா.