பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்துகின்றன.
லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பெஷாவர் ஸால்மி அணியின் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லாகூர் கலந்தர்ஸ் : மிர்சா தாஹிர் பெய்க், ஃபகார் ஸமான், அப்துல்லா ஷஃபிக், சாம் பில்லிங்ஸ், அஹ்சன் பாட்டி, சிக்கந்தர் ராசா, டேவிட் வைஸ், ரஷித் கான், ஷஹீன் அப்ரிடி(கே), ஹாரிஸ் ராவுப், ஸமான் கான்
பெஷாவர் ஸால்மி : சைம் அயூப், பாபர் ஆசம்(கே), டாம் கோஹ்லர்-காட்மோர், முகமது ஹரிஸ், பானுகா ராஜபக்ஷ, ஹசீபுல்லா கான், அமீர் ஜமால், அஸ்மதுல்லா ஒமர்சாய், வஹாப் ரியாஸ், முஜீப் உர் ரஹ்மான், சல்மான் இர்ஷாத்.