140 கிலோ எடையும், ஆறரை அடி உயரமும் கொண்ட அதிரடி வீரர் வெஸ்ட் இண்டீஸின் ரஹீம் கார்ன்வால். இவரது உருவம் மற்றும் எடையை பொருட்படுத்தாமல் தனது திறமையின் அடிப்படையில் அணியில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர்.
சுழற்பந்து வீச்சு, அதிரடியான பேட்டிங் என சர்வதேச கிரிக்கெட்டை தன் பக்கம் திருப்பிய ரஹீம் கார்ன்வால், விளையாட்டாக சிக்சர்களை பறக்கவிடும் வீரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்து தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இவர் அளித்த ஒரு பேட்டியில்“எனது உருவம் காரணமாக பலர் என்னை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் எனது உயரம் சிறந்த பந்துவீச்சு மற்றும் சுழலுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே உடல் எடையை குறைப்பது எனது விளையாட்டை விட எனது ஆரோக்கியத்திற்கு நல்லது. நான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ரஹீம் கார்ன்வாலின் பேட்டி...!