ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்: ‘பாகிஸ்தானின் சிங்கம்’ இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பாகிஸ்தானின் பிரதமருமானவர் இம்ரான் கான். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை முதன் முறையாக வென்றது.
பேட்டிங், பவுலிங் என எதிரணி வீரர்களுக்கு சவால் அளித்துள்ள இவர், பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 88 டெஸ்ட், 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்ற இம்ரான் கான், ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இதுகுறித்து ஐசிசியின் யூடியூப் காணொளி இதோ..!
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News