நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட்டின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து ‘ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ‘ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார்.
இலையில் இது குறித்து பேசிய இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், “எனது பெயரையும் சச்சின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். நான் ஒருபோதும் அப்படி சிக்ஸர்கள் அடித்ததில்லை. ஒருவேளை சச்சினின் பெயர் அவருக்கு உதவியிருக்கலாம்” என கலகலப்பாக கூறியுள்ளார்.