ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்ம - வைரலாகும் காணொளி!
![Rohit Sharma Slams 29 Runs Off Mitchell Starc Over In Brutal Display - Watch Video! ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்ம - வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/T20-WC-2024-Rohit-Sharma-slams-29-runs-off-Mitchell-Starc-over-in-brutal-display-watch-video-lg1-lg.jpg)
ஸ்டார்க் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்ம - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement