
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பசக நடைபெற்று வருகிறத்.. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி: மெக் லெனிங்(கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனசென், மரிஸான் கேப், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, மின்னு மணி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வயட்-ஹாட்ஜ், எல்லிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், ஏக்தா பிஷ்ட், ஜோஷிதா விஜே, ரேணுகா தாக்கூர் சிங்.