தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியிலும் எந்த மாற்றங்களும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக், ஜென்னெமன் மலான், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா(கே), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, கேசவ் மகாராஜ், சிசாந்தா மகாலா, தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இங்கிடி
இந்தியா: கேஎல் ராகுல் (கே), ஷிகர் தவான், விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.