இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்துள்ளனர்.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பல்லகலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
ஜிம்பாப்வே: தகுத்ஸ்வானாஷே கைடானோ, ரெஜிஸ் சகாப்வா, கிரேக் எர்வின்(ஜே), சீன் வில்லியம்ஸ், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராஸா, ரியான் பர்ல், வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகரவா
இலங்கை: பாதும் நிசாங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தினேஷ் சண்டிமல், ரமேஷ் மெண்டிஸ், சரித் அசலங்கா, தசுன் ஷானக(கே), சமிக கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வான்டர்சே, துஷ்மந்த சமீரா.