தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விலையாடி வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் டீன் எல்கர் கேப்டனாக களமிறங்கினார்.
இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுங்கி இங்கிடி மற்றும் கேசவ் மகாராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்திய அணியில் ரவீச்சந்திர ஜடேஜா, முகேஷ் குமார் ஆகியோரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர்(கே), ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.