தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயானடி20 தொடரானது நாளை (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆசம், சைம் அயூப், உஸ்மான் கான், தயப் தாஹிர், இர்பான் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், சுபியான் முகீம், அப்ரார் அகமது
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரஸ்ஸி வான் டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ பிரீட்ஸ்கி, ஹென்ரிச் கிளாசென்(கேப்டன்), டேவிட் மில்லர், டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, அண்டில் சிமெலேன், நகாபயோம்சி பீட்டர், குவேனா மபாகா, ஒட்னீல் பார்ட்மேன்.