
தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 13) செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆசம், சைம் அயூப், உஸ்மான் கான், தயாப் தாஹிர், இர்ஃபான் கான், ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கெல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென்(கேப்டன்), டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, தயான் கலீம், நகாபயோம்ஸி பீட்டர், க்வேனா மபாகா, ஒட்னீல் பார்ட்மேன்