தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்துள்ளது.
இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் மற்றும் அறிமுக வீரர் குவேனா மபாகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷாவிற்கு பதிலாக மிர் ஹம்ஸா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தொடரின் முதல் போட்டியில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கே), டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத்(கே), சைம் அயூப், பாபர் ஆசாம், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, அமீர் ஜமால், மிர் ஹம்சா, குர்ரம் ஷஷாத், முகமது அப்பாஸ்.