
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டேன் பீட்டர்சென், ரியான் ரிக்கெல்டன் அகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும். அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இலங்கை அணியும் கடுமையான சவாலை அளிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்னே, பதும் நிஷங்கா, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கே), குசால் மெண்டிஸ் , பிரபாத் ஜெயசூரியா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமார
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா(கே), டேவிட் பெட்டிங்காம், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரையன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, டேன் பேட்டர்சன்.