தென் ஆப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரொனான் ஹெர்மன், லியூஸ் டு ப்ளூய், மொயீன் அலி, டொனோவன் ஃபெரீரா, ரொமாரியோ ஷெப்பர்ட், நந்த்ரே பர்கர், லிசாத் வில்லியம்ஸ், ஜாஹிர் கான், இம்ரான் தாஹிர்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்: ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், கானர் எஸ்டெர்ஹூய்சென், லியாம் லிவிங்ஸ்டோன், கீரன் பொல்லார்ட்(கே), சாம் கரன், ஜார்ஜ் லிண்டே, காகிசோ ரபாடா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஒல்லி ஸ்டோன்.