தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சேஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), டெவான் கான்வே, விஹான் லூப், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஜேபி கிங், எவான் ஜோன்ஸ், ஹார்டுஸ் வில்ஜோன், மஹீஷ் தீக்ஷனா, இம்ரான் தாஹிர், லூதோ சிபாம்லா
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பிளேயிங் லெவன்: டோனி டி ஸோர்ஸி, டேவிட் பெடிங்ஹாம், ஜோர்டான் ஹர்மன், டாம் அபெல், ஐடன் மார்க்ராம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லியாம் டௌசன், கிரெய்க் ஓவர்டன், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.