தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பந்துவீச அழைத்துள்ளது. இப்போட்டிக்கான டர்பன் அணியில் டுவைன் பிரிட்டோரியஸுக்கு பதிலாக பிரேனாயன் சுப்ராயன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஜோபர்க் அணியில் இம்ரான் தாஹிர் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளனர்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: பிராண்டன் கிங், மேத்யூ ப்ரீட்ஸ்கி, குயின்டன் டி காக், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், ஜேசன் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரேனாயன் சுப்ரயன், கேசவ் மகராஜ்(கேப்டன்), நவீன்-உல்-ஹக், நூர் அஹ்மத்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவான் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), லியுஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், விஹான் லூபே, டொனோவன் ஃபெரீரா, டேவிட் வைஸ், ஜெரால்ட் கோட்ஸி, மதீஷா பதிரானா, தப்ரைஸ் ஷம்சி, இம்ரான் தாஹிர்.