தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் இப்போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெயும் முனைப்புடன் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விலையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: குயின்டன் டி காக், மேத்யூ ப்ரீட்ஸ்கே, கேன் வில்லியம்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹென்ரிச் கிளாசென், வியான் முல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ்(கே), நவீன்-உல்-ஹக், நூர் அகமது, கிறிஸ்டோபர் கிங்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவன் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), லியூஸ் டு ப்ளூய், மொயீன் அலி, விஹான் லுபே, சிபோனெலோ மகன்யா, டோனோவன் ஃபெரீரா, ஹார்டஸ் வில்ஜோன், மஹீஷ் தீக்ஷனா, தப்ரைஸ் ஷம்சி, லூதோ சிபம்லா.