தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஃபிரான்சைஸ் லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ர பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியில் ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக மீண்டும் கானர் எஸ்டெர்ஹுய்செனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பார்ல் ராயல்ஸ் அணியில் சாம் ஹைன் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் நீக்கப்பட்டு ஆண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் காரணமாக பார்ல் ராயல்ஸ் அணி முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடிகொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
எம்ஐ கேப் டவுன் பிளேயிங் லெவன்: ரஸ்ஸி வேன்டெர் டுசென், கானர் எஸ்டெர்ஹுய்சென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், காலின் இங்க்ராம், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர், டெவால்ட் பிரீவிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத் கான்(கேப்டன்), காகிசோ ரபாடா, டிரெண்ட் போல்ட்
பார்ல் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், மிட்செல் வான் புரன், டேவிட் மில்லர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் கலீம், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லாலகே, முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா.