தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத நிலையில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 3 மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிரிட்டோரியா கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: வில் ஜாக்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், கைல் வெர்ரைன், ரைலீ ரூஸோவ்(கே), மார்க்வெஸ் அக்கர்மேன், கீகன் லயன் கேசெட், ஜேம்ஸ் நீஷம், செனுரன் முத்துசாமி, கைல் சிம்மண்ட்ஸ், ஈதன் போஷ், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ப்ளேயிங் லெவன்: டேவிட் பெடிங்ஹாம், ஸாக் கிரௌலி, டாம் ஆபெல், ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், சைமன் ஹார்மர், ஒட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.