தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் முன்னேறிவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணியும், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் ஆணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கன இரு அணியிலும் சில மாற்றங்கள் சேய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பார்ல் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மிட்செல் ஓவன், ரூபின் ஹெர்மன், அண்டில் பெஹ்லுக்வாயோ, டேவிட் மில்லர்(கே), தினேஷ் கார்த்திக், தயான் கலீம், ஈஷான் மலிங்கா, ஜார்ன் ஃபோர்டுயின், முஜீப் உர் ரஹ்மான், குவேனா மபாகா
எம்ஐ கேப்டவுன் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கெல்டன், ரஸ்ஸி வான்டெர் டுசென், ரீசா ஹென்ட்ரிக்ஸ், செதிகுல்லா அடல், டெவால்ட் பிரீவிஸ், டெலானோ போட்ஜிட்டர், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ரஷித் கான்(கே), காகிசோ ரபாடா, டிரெண்ட் போல்ட்