![SA20 2025 Qualifier 2: Paarl Royals have won the toss and have opted to bat! எஸ்ஏ20 2025 குவாலிஃபையர் 2: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது பார்ல் ராயல்ஸ்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/SA20-2025-Dinesh-Karthiks-fifty-helps-to-carry-Paarl-Royals-to-150-in-their-20-overs!-lg.jpg)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படாமல், கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் விளையாடவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இதில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பிளேயிங் லெவன்: டேவிட் பெடிங்ஹாம், டோனி டி ஸோர்ஸி, ஜோர்டான் ஹர்மன், டாம் அபெல், ஐடன் மார்க்ராம்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கிரெய்க் ஓவர்டன், லியாம் டௌசன், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.
பார்ல் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், மிட்செல் ஓவன், ரூபின் ஹர்மன், துனித் வெல்லாலகே, டேவிட் மில்லர்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், தயான் கலீம், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, முஜீப் உர் ரஹ்மான், பிஜோர்ன் ஃபோர்டுயின், குவேனா மபாகா.