எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை பந்துவீச அழைத்துள்ளது. இதில் கடந்த இரண்டு சீசன்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஈஸ்டர்ன் கேப் அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்: மேத்யூ பிரீட்ஸ்கீ, குயின்டன் டி காக், கேன் வில்லியம்சன், வியான் முல்டர், ஜேசன் ஸ்மித், ஹென்ரிச் கிளாசென், பிரைஸ் பார்சன்ஸ், கிறிஸ் வோக்ஸ், கேஷவ் மகாராஜ்(கேப்டன்), நூர் அகமது, நவீன்-உல்-ஹக்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பிளேயிங் லெவன்: டேவிட் பெடிங்ஹாம், ஸாக் கிரௌலி, டாம் ஏபெல், ஐடன் மார்க்ராம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (கீப்பர்), ஜோர்டான் ஹெர்மன், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், சைமன் ஹார்மர், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்.