தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, டேவிட் பெடிங்ஹாம், டாம் ஆபெல், ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லியாம் டாசன், சைமன் ஹார்மர், ஆட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), லியூஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், விஹான் லுபே, டொனோவன் ஃபெரீரா, இவான் ஜோன்ஸ், ஹர்டஸ் வில்ஜோன், மஹீஷ் தீக்ஷனா, இம்ரான் தாஹிர், லூத்தோ சிபம்லா.