தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது இன்று மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.
அதன்படி, இன்று நடைபெறும் எஸ்ஏ20 மூன்றாவது சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கடந்த இரு சீசன்களிலும் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதனால் நடப்பு சீசனையும் வெற்றியுடன் தொடங்கி தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது கடந்த இரு சீசன்களிலும் சோபிக்க தவறிய நிலையில், இந்தாண்டு அதனை மாற்றி இத்தொடரில் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பிளேயிங் லெவன்: ஜோர்டான் ஹெர்மன், ஸாக் கிரௌலி, டாம் ஆபெல், ஐடன் மார்க்ரம்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெட்டிங்ஹாம், பெயர்ஸ் ஸ்வான்போல், மார்கோ ஜான்சன், லியாம் டௌசன், சைமன் ஹார்மர், ரிச்சர்ட் க்ளீசன்
மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் பிளேயிங் லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெவால்ட் பிரீவிஸ், காலின் இங்க்ராம், கானர் எஸ்டெர்ஹூய்சென், டெலானோ போட்ஜிட்டர், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஜார்ஜ் லிண்டே, ரஷித் கான்(கே), கார்பின் போஷ், டிரென்ட் போல்ட்.