ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி இரண்டு டி20, ஒரு ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி எடின்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக முடிவுசெய்துள்ளது.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், டேன் கிளீவர், மைக்கேல் ரிப்பன், மிட்செல் சான்ட்னர்(c), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், ஒல்லி ஹேர்ஸ், ரிச்சி பெரிங்டன்(கே), மேத்யூ கிராஸ், கிறிஸ் க்ரீவ்ஸ், மைக்கேல் லீஸ்க், மார்க் வாட், ஹம்ஸா தாஹிர், அலஸ்டெய்ர் எவன்ஸ், கவின் மெயின்.