ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள இரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
அதன்படி இன்று நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), டெவன் கான்வே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுதி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்.
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர்(கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலாஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.