ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அபுதாபியில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டி என்பதால் இரு அணியும் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி(கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷாசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(கே), குல்பாடின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், ஹமீத் ஹசன்.