ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கனொலி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இலங்கை அணியில் பதும் நிஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமாரா ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், கூப்பர் கனொலி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன்.
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கேப்டன்), குசால் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், லஹிரு குமாரா.