ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இப்போட்டிக்கான இந்திய அணி எந்த மாற்றங்களும் இன்றி களமிறங்குகிறது. அதேசமயம் இலங்கை அணியில் இசுரு உதானாவிற்கு பதிலாக கசுன் ரஜிதா அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை -மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜ்பக்ஷ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, கசுன் ரஜிதா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா.
இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.