நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (செப்.26) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்துள்ளது. மேலும் இப்போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் நிஷான் பெய்ரிஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு மிலன் ரத்நாயக்காவும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இத்தொடரில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடி போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ(கே), அஜாஸ் படேல், வில்லியம் ஓரூர்கே
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கே), குசல் மெண்டிஸ், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், அசிதா ஃபெர்னாண்டோ.