இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெறவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷனகா, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, தில்ஷன் மதுஷங்க
ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே: தகுத்ஸ்வானாஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகம்வே, கிரெய்க் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, ஃபராஸ் அக்ரம், ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, தபிவா முஃபுட்சா.